உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து கொழும்பு பேராயருக்கு முன்கூட்டியே எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், ஏப்ரல் 21ஆம் திகதி காலையில் கொழும்பு பேராயர் இல்லத்தில் (Bishops House) நடைபெற்ற தனியார் திருப்பலி வழிபாட்டின் பின்னரே இந்த பேரழிவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று (17) தெரிவித்துள்ளார்.
“தாக்குதலுக்கு முன்னர் கர்தினாலுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதால், அவரது பாதுகாப்புப் பிரிவினரால் அவருக்கு இந்தத் தகவல் முன்கூட்டியே வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானதாகும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னரே அவருக்குப் பாதுகாப்புப் பிரிவினர் அடங்கிய குழுவொன்று வழங்கப்பட்டது” என்றும் அருட்தந்தை சிறில் காமினி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.