கடந்த 2026 பிப்ரவரி 26 அன்று முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அரியாலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான சொத்துக்களை யாழ்ப்பாண பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேகநபரால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் இச்சொத்துக்கள், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுள் 695,950 ரூபாய் பெறுமதியான ஒரு டிங்கி படகும் அதன் எஞ்சினும், மற்றும் சுமார் 900,000 ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அடங்குகின்றன.
யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.