காணாமல் போன மீனவரின் பிள்ளைகளின் கல்விக்கு முழுப் பொறுப்பு:
அண்மையில் கடலுக்குச் சென்றபோது காணாமல் போன கோரியடி மீனவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் எமது கட்சி அக்கறையாகவுள்ளது. அதற்கமைய, இரண்டு பிள்ளைகளினது கல்விகற்கும் காலம் முழுவதுக்குமான கல்விச்செலவைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது.
மீனவர் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூபா 5 லட்சம் நிதியுதவி:
கோரியடி வாழ் மீனவத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வட்டியற்ற இலகு தவணைகளில் மீளச் செலுத்தக்கூடிய ரூபா 500,000/= (ஐந்து லட்சம்) பெறுமதியான காசோலை, மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகத் த.தே.ம.முன்னணியால் வழங்கி வைக்கப்பட்டது