பண்டைய தொல்பொருள் மதிப்புடையதாகக் கருதப்படும் பொருளொன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற ஐந்து சந்தேக நபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், புல்மோட்டை பொலிஸ் பிரிவின் தென்னமரவாடி பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தங்கள் வசமிருந்த தொல்பொருள் மதிப்புடைய பொருளை 20 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளனர்.
அதன்போதே பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 29 முதல் 57 வயதுக்குட்பட்ட நபர்கள், புளியங்குளம், ,ஈச்சிலம்பத்து மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
புல்மோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.