பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கான, விசாரணை திகதிகளை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி அழைக்குமாறு திங்கட்கிழமை (01) கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (01) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்துள்ளார்.
வழக்கிற்கு முந்தைய பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் விசாரணைத் திகதியை தீர்மானிப்பதற்காக ஜூன் 26 ஆம் திகதி மீண்டும் இவ்வழக்கை அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.