நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி, இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் கையெழுத்துப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர், அரசியல் கட்சியின் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு, சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.








