லுனுகலையில் திடீர் தீ விபத்து: குடியிருப்புகள் தீக்கிரை

லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலண்ட்ஸ் தோட்டத்தின் சுவின்டன் பிரிவு, 24ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் (லயன் குடியிருப்பு) இன்று (01.06.2026) திங்கட்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக மூன்று குடியிருப்புகள் கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

இன்று காலை வீடொன்றில் திடீரெனப் பற்றி எரியத் தொடங்கிய தீ, கண் இமைக்கும் நேரத்திற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

தீப்பரவலைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக ஒன்றிணைந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

பொதுமக்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட போதிலும், இந்தத் தீப்பரவலில் இரண்டு தொழிலாளர் வீடுகள் முற்றfactoryகக் கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன், மற்றொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குடியிருப்புகளில் இருந்த மக்கள் அனைவரும் வேலைகளுக்குச் சென்றிருந்ததாலும், சிலர் வீடுகளுக்கு வெளியே இருந்ததாலும் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீடுகளில் இருந்த பெறுமதியான ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லுனுகலை பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தீப்பரவலானது மின்சாரக் கசிவு (மின் ஒழுக்கு) காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்பட்டதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

708168729_1516805196511395_2514990978381416714_n

உளநல விழிப்புணர்வு!

June 1, 2026

உளநல விழிப்புணர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) பி. ப 03.00

மீகொட வாகன விபத்து வழக்கு: நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

June 1, 2026

மீகொட பகுதியில் உள்ள வெசாக் தன்சல் (தானப்பந்தல்) ஒன்றில் இடம்பெற்ற கொடிய விபத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டுநர் வரும் ஜூன்

Gnanasa

ஜூன் 26 ஆம் திகதி ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை

June 1, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கான, விசாரணை திகதிகளை

lun

லுனுகலையில் திடீர் தீ விபத்து: குடியிருப்புகள் தீக்கிரை

June 1, 2026

லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலண்ட்ஸ் தோட்டத்தின் சுவின்டன் பிரிவு, 24ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் (லயன்

epo

இலங்கை எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்: சுகாதார அமைச்சு

June 1, 2026

எபோலா (Ebola) வைரஸ் பரவலுடன் தொடர்புடைய எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்துள்ளதாகப் பொதுச் சுகாதார

Education

2027ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைப் பரீட்சைக் காலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

June 1, 2026

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம் கல்விப் பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணைகள் மற்றும் பாடசாலைத் தவணைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. கல்வி

Bus

பேருந்து கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்கவும்

June 1, 2026

சனிக்கிழமை (30) அன்று மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இடைக்காலப் பேருந்து கட்டணத் திருத்தம் ஒன்றை அமுல்படுத்துமாறு இலங்கை

jv

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் மோதல்?

June 1, 2026

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் ஜே.வி.பி. – தேசிய மக்கள் சக்தி மோதல் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக ஆளுங்கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

jv

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் மோதல்?

June 1, 2026

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் ஜே.வி.பி. – தேசிய மக்கள் சக்தி மோதல் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக ஆளுங்கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

photo-collage.png (44)

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கையெழுத்துப் போராட்டமும்!

June 1, 2026

நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி, இன்று வவுனியா பழைய பேருந்து

LPG Commercial

“ஜூன் மாத தொடக்கத்திலேயே அதிர்ச்சி!” – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; வணிக சிலிண்டர் விலை ரூ.46 அசுர வேக அதிகரிப்பு!

June 1, 2026

சென்னை: “மேற்காசியப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறக்குமதிச் சுமையைக்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தால் முதல்வர் மன்னிக்க மாட்டார்!” – மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அசுர வேக அதிரடி எச்சரிக்கை!

June 1, 2026

மதுரை: “தமிழ்நாட்டின் உன்னத இயற்கை வளங்களை அநியாயமாகக் கொள்ளையடிப்பது எந்தவொரு பெரிய புள்ளியாக இருந்தாலும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்