அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று(31.05.2026) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று(30) மாலை இடம்பெற்ற இந்தத் துரதிர்ஷ்டவசமான அனர்த்தத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னரே, இன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஹுங்கம பொலிஸாரின் தகவல்களின்படி, உயிரிழந்த மூன்று மாணவர்களும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 12, 17 மற்றும் 18 வயதுடைய உடன்பிறவாச் சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் காணாமற் போயுள்ளனர்.
அம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய பிரதேசத்தில் நேற்று(30) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!
காணாமல் போன பிள்ளைகள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பிள்ளைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.