ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காணாமல் போன பிள்ளைகள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காணாமல் போன பிள்ளைகளைக் கண்டறியும் நோக்கில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.