தேசிய ரணவிரு நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் முகங்கொடுக்கத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறும் போதே, இன்று (20) அவர் ஊடகங்களிடம் இக்கருத்துக்களை வெளியிட்டார்.
நினைவுத்தூபிக்கு அருகில் நடந்த நிகழ்வு தொடர்பாக வழக்குத் தொடரப்பட வாய்ப்புள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ரணவிருகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால், அதற்கு முகங்கொடுக்கத் தான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என வீரவங்ச குறிப்பிட்டார்.
“ரணவிருகளுக்கு மலரஞ்சலி செலுத்தி கௌரவிப்பதற்கான முயற்சிகள் தடுக்கப்பட்டு, அதற்கு எதிராக வழக்குத் தொடர முற்பட்டால், அத்தகைய வழக்கை எதிர்கொள்ள நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.