மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு 7 வயது சிறுவன் நடைபயணம்

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி இன்று புதன்கிழமை (20) நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். பிரேம்ராஜ் கார்கி என்ற இந்த சிறுவன் லிந்துலை, இந்தன்ஹோல் (Indenhaul) தோட்டத்தை சேர்ந்தவராவார். இவர் லிந்துலை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார். மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஆகியவற்றில் மகஜர்களை […]
நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்து இளைஞன் படுகாயம்

பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியிலுள்ள ‘கலுவல’ நீர்வீழ்ச்சியில் (Kaluwala Waterfall) புதன்கிழமை (20) பிற்பகல் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவன், நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லியன்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை, பிந்துனுவெவ – மீரியகஸ் சந்தை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இவ்விளைஞன் தனது நண்பர்கள் ஐவருடன் இணைந்து அம்பதண்டேகம கலுவல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து […]
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் திறப்பு

ட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். […]
அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மூன்று கட்டங்களாக அரச சேவையின் சம்பள அதிகரிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பெரிய அளவிலான பிரச்சினைகள் பல உள்ளதாகக் கூறினார். இது குறித்து ஜனாதிபதி மேலும் பேசுகையில்: “எமக்கு ஒரு வலுவான அரச சேவை அவசியமாகும். எமது பொலிஸார், முப்படையினர் மற்றும் அரசாங்க அதிபர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை உள்ளடங்கிய ஒரு பலமிக்க அரச […]
நீதிமன்ற வெளிப்படுத்தல்களுக்கு நாமல் ராஜபக்ஷ பதில்: சிறையில் பிள்ளையானைச் சந்தித்தது இரகசியமல்ல

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளுடன் தொடர்புபடுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுடனான சந்திப்புகள் குறித்து நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலடி கொடுத்துள்ளார். பிள்ளையான் சிறையிலிருந்த போது அவரைத் தான் சென்று சந்தித்தமை “ஒன்றும் இரகசியமான விடயமல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கையில், 2018 மற்றும் 2019 […]
காசா நிவாரணக் கப்பல் செயற்பாட்டாளர்கள் நடத்தப்பட்ட விதம்: இஸ்ரேலிடம் தூதுவரை அழைத்து கண்டனம் வெளியிட கனடா முடிவு

காசாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணியில் (Gaza flotilla) பயணித்து, இஸ்ரேலினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை ஏளனம் செய்யும் வகையிலான வீடியோ ஒன்றை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய தூதுவரை நேரில் அழைத்து (Summon) தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita […]
மாகாண சபை முறைமை ஊடாக வடக்கு, கிழக்கில் இந்தியா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயல்கிறது: ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க குற்றச்சாட்டு

இலங்கையின் மாகாண சபை முறைமையைப் பயன்படுத்தி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பரந்த வியூகமொன்றை இந்தியா பின்பற்றி வருவதாக ஓய்வுபெற்ற ரியர் அட்மிரலும், இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருமான டி.கே.பி. தஸநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவு மற்றும் இழுபறி நிலையில் உள்ள மீனவர் விவகாரங்கள் யாவும் ஒரு பரந்த புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலின் (Geopolitical agenda) பாகமே என்றும் தஸநாயக்க குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மீனவ சமூகம் மற்றும் […]
இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்! தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே-தி வேல்முருகன்.

சீமான் குறித்து அநாகரிகமாகப் பேசும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சசுனாவை கண்டித்து தவாக தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்விவரம்….. இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்! தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே! நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், தங்களுடைய அரசியல் உரிமை,மொழி உரிமை,நிலஉரிமை மற்றும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து தங்களுக்கான விடுதலைக்காக,75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.பல தலைமுறைகள் தங்கள் குழந்தைப்பருவத்தையும்,குடும்பங்களையும், கல்வியையும்,வாழ்வாதாரத்தையும் இழந்தனர். தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நீதிமன்றில் சிஐடி அதிரடி வெளிப்படுத்தல்: சுரேஷ் சாலிதான் சூத்திரதாரி; பிள்ளையான் குழுவிற்கு அரச பணம் பகிர்ந்தளிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் பின்னணியைக் கொண்ட ஏனைய பல குற்றச் செயல்களில், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலி முதன்மைப் பாத்திரம் வகித்துள்ளார் எனக் குற்றம் சாட்டி, குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது (CID) சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) அதிரடி வெளிப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ், பிரான்சில் வைத்து […]
சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக் கைதியாக இருந்த பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த தகவல்களை, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(20.05.2026) தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக இதன்போது மகிந்த, பசில் மற்றும் நாமல் ராஜபக்ச […]