“ஜோசப்னு சொன்னதும் ஓட்டு போட்டுட்டீங்க!” – முதலமைச்சர் விஜய்யின் மதத்தைக் குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

தூத்துக்குடி:

“இந்துக்கள் ஓட்டு வேண்டும் போது விஜய் என்றும், கிறிஸ்தவர்கள் ஓட்டு வேண்டும் போது ஜோசப் விஜய் என்றும் மாறி மக்களை ஏமாற்றித் தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது; ஜோசப் என்று சொன்னவுடன் மக்கள் ஓட்டுப் போட்டுவிட்டார்கள்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக கூட்டணி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்வியின் பாதிப்பால் திமுக நிர்வாகிகள் பலரும் தவெக மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய்யின் மத அடையாளத்தைக் குறிப்பிட்டு அதிரடியாகப் பேசியுள்ளார்.

அவர் கூட்டத்தில் பேசியதாவது: “நான் அனிதா ராதாகிருஷ்ணன் தான், ‘ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன்’ இல்லை. இந்துக்கள் ஓட்டு வேண்டும் என்கிற போது விஜய் என்றும், கிறிஸ்தவர்கள் ஓட்டு வேண்டும் என்கிற போது ஜோசப் விஜய்யாகவும் அவர் மாறிவிடுகிறார். மக்களை ஏமாற்றி, சின்னப் பிள்ளைகளைத் தூண்டிவிட்டு விஜய்க்கு ஓட்டுப் போடச் சொல்லித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்குத் தான் இந்த தவெக ஆட்சி ஓடும். அதன் பிறகு மீண்டும் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று சாடினார்.

மேலும் தவெக-வுக்கு ஆதரவளித்த காங்கிரஸைக் கடுமையாகச் சாடிய அவர், “காங்கிரஸார் எங்களால் தான் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் ராத்திரியோடு ராத்திரியாகப் பெட்டியைக் கட்டிக்கொண்டு தவெக கூட்டணிக்கு ஓடிவிட்டார்கள். ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் சொன்னது எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தான். அப்படிப்பட்ட தலைவரை விடுத்து, இன்று விஜய் கைபிடித்து ராகுல் நிற்பது எவ்வளவு பெரிய மானக்கேடு. தமிழ்நாட்டில் காங்கிரஸை மொத்தமாகக் காலி செய்ய வேண்டும், இனி அந்தக் கையே இங்கு இருக்கக் கூடாது. நீங்கள் எங்களை மதத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறீர்கள்; ஆனால் ஜோசப் என்ற பெயரைக் கண்டதும் நீங்கள்தான் மதத்தைப் பார்த்து ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள். இனி நான் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்று சொன்னால் எனக்கு ஓட்டுப் போடுவீர்களா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, “எப்படியோ எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த உங்களின் பொற்பாதங்களைத் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி முடித்தார். முதலமைச்சர் விஜய்யின் பெயரையும் மதத்தையும் குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள இந்த சர்ச்சை பேச்சுக்குத் தவெக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருவதால், தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

#AnithaRadhakrishnan #TuticorinSpeech #ControversialSpeech #VijayReligionIssue #BreakingNews #May20 #DMK_VsTVK #CongressBetrayal #RahulGandhi #ThalapathyVijay #TVK_Government #NewGovernmentTN #JosephVijay #DMK_Defeat #TN_Politics2026 #SecularAlliance #PoliticalSensations #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109