இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று திங்கட்கிழமை (18) இலங்கை வந்தடைந்தார்.
அவர் மே 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (19) காலை பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்தில் அவர் மலரஞ்சலி செலுத்தினார்.