குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு தலைமையில் நடைபெற்ற இந்நாளில், இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – மே 18”, “தமிழின அழிப்பு நாள்” ஆகிய வாசகங்கள் தாங்கிய பிரதான பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் முதல் அம்சமாக, ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, ஈழப் போராட்டத்தில் தனது காலை இழந்த மாற்றுத்திறனாளி போராளியான கோபாலசிங்கத்தால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அங்கு கூடியிருந்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனையடுத்து, அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், உபதவிசாளர் அ.விசிகரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றி, மரணத்தின் விளிம்பில் உப்புக் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர் தப்பிய அவல நிலையை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கும் நிகழ்வும் இங்கு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

“உயிரிழந்த உறவுகளின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்ற உறுதியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.
0

மல்வானை காணியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் சம்மதம் ; பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்!

1

“திருப்பரங்குன்றத்திற்குப் புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது!” – தச்சநல்லூரில் தடுத்து நிறுத்தம்!

November 24, 2026

நெல்லை: நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்களுடன் நெல்லை மாநகர காவல்துறையினரால்

WhatsApp Image 2026-11-24 at 14.19.10

ஐரோப்பிய ஒன்றியத் தமிழ்ப் புலம்பெயர்ந்தோரின் மாவீரர் நினைவேந்தல்

November 24, 2026

இந்த நவம்பர் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரம், கௌரவம்

921867138_122108245383551191_5710797953442512586_n

Brampton தமிழீழ தேசியக் கொடி நாள் நிகழ்வில் மேயர் Patrick Brown!

November 24, 2026

தமிழீழ தேசியக் கொடி நாளை முன்னிட்டு, கனடாவின் Brampton நகரிலுள்ள Ken Whillans Square சதுக்கத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில்

915632402_29075224352170659_3759274996893934086_n

பிரித்தானியாவில் லிவர்பூலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு

November 24, 2026

லிவர்பூல், நவம்பர் 21, 2026 – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு

902143220_122227379858360374_6202966544825060215_n

Behind Me Media தலைமை அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் 2026

November 24, 2026

2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாவீரர்

gary

‘மசார் படில்’ அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தது கனடா

November 24, 2026

ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ‘சமிடூன்’ (Samidoun) அமைப்பின் மாற்றுப் பெயராகச் செயற்பட்டு வருவதாகக் கூறி, ‘மசார் படில்’ (Masar Badil) அமைப்பைத்

pete hege

கனடாவுடனான பாதுகாப்பு உறவுகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இரகசிய உத்தரவு; கள மட்டத்தில் மாற்றமில்லை என்கிறது ஒட்டாவா

November 24, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கப் போர்ச் செயலாளர் (Secretary of War) பீட் ஹெக்செத்

pete hege

பாதுகாப்பை விட பொருளாதார நலன்களுக்கே கனடா முன்னுரிமை: அமெரிக்கா குற்றச்சாட்டு நேட்டோ, நோராட் கடமைகளை கனடா நிறைவேற்றவில்லை என பென்டகன் சாடல் பத்திரிகை மற்றும் முக்கிய செய்திகளுக்கு (Print / Lead News – விரிவானவை): இராணுவத் தயார்நிலை வீழ்ச்சி; பாதுகாப்புச் செலவினங்களில் கனடா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா கடும் விமர்சனம் அமெரிக்க – கனடா பாதுகாப்பு உறவில் விரிசல்: கனடிய அரசாங்கத்தின் கொள்கைகளைச் சாடிய பென்டகன்

November 24, 2026

வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) மற்றும் நேட்டோ (NATO) அமைப்புகளுக்கான சர்வதேசக் கடமைகளை கனடா முறையாக நிறைவேற்றவில்லை

phototune.ai_1795493634

பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்பபில் போதைப்பொருள் பாவனை?

November 24, 2026

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள்

download

2027 ஆம் ஆண்டுக்காக மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள்!

November 24, 2026

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம்

phototune.ai_1795493805

விசுவமடுவில் 180 மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு!

November 24, 2026
WhatsApp Image 2026-11-24 at 09.23.18

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 24, 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் நகரின்