முத்துநகர் மக்கள் சூரிய சக்தி மின் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம்?

​திருகோணமலை, முத்துநகர் கிராமத்தில் சூரிய சக்தி மின் திட்டத்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.​

இது தொடர்பாக அவர் நேற்று (17) விடுத்துள்ள அவசர ஊடக அறிக்கையில், முத்துநகர் பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பல தலைமுறைகளாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், அங்கு முன்னெடுக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்திற்காக மக்களின் விவசாயக் காணிகள் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானவை என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்களின் பாரம்பரிய பூர்வீகக் காணிகளைப் பாதுகாக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் அதிகாரிகளுடனான சந்திப்புகளையும் மேற்கொண்டு வந்த போதிலும், இதுவரை அரசாங்கத்தரப்பிலிருந்து எந்தவொரு நீதியான தீர்வும் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

தற்போதுள்ள நிலவரப்படி, மேலும் சுமார் 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட விவசாய நிலங்கள் வேலி அடைக்கப்பட்டு, சூரிய சக்தி திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தினால் விவசாயிகள் மட்டுமன்றி, அப்பகுதியில் வாழும் கடற்றொழில் குடும்பங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.​குறிப்பாக, முத்துநகர் பகுதியில் வாழும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடலுக்குச் செல்வதற்காகப் பயன்படுத்தி வந்த பிரதான வீதி இந்த சோலார் திட்டத்திற்காக மறைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் தங்களின் அன்றாடத் தொழிலை முன்னெடுக்க முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளது.​ நஷ்டஈடோ மாற்றுத் திட்டமோ இல்லை இவ்வாறு பலாத்காரமாக வாழ்வாதாரக் காணிகளை இழந்து நிர்க்கதியாகி நிற்கும் முத்துநகர் மக்களுக்கு, இதுவரை மாற்றுத் தகுந்த காணிகளோ, முறையான நஷ்டஈடுகளோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான மாற்றுத் திட்டங்களோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்கிடமான விடயமாகும்.​

எனவே, ​முத்துநகர் கடற்றொழிலாளர்கள் தமது தொழிலுக்காகப் பயன்படுத்தி வந்த, தற்போது மூடப்பட்டுள்ள கடற்கரைச் செல்லும் பிரதான வீதியை உடனடியாகத் திறந்து மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

​பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக தகுந்த மாற்று விவசாயக் காணிகள் உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும்.

​அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயற்பாடுகளை விடுத்து, உள்ளூர் மக்களின் பங்களிப்புடனும் இணக்கப்பாட்டுடனும் மாற்று வழிகள் ஆராயப்பட வேண்டும்.​

மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கமும் உரிய உயர்மட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, முத்துநகர் மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109