இன்று மதியம் கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் சுழிபுரம் பறாளாய் வயலில் தனது தந்தையுடன் வேலை செய்துகொண்டிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும் விக்ரோறியா கல்லூரியின் உயர்தர மாணவனுமான அண்ணாத்துரை வினூசன் என்பவரே உயிரிழந்தார்.