சென்னை:
அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த பின்னரே அங்கு செல்வோம்” என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சி அலுவலகத்திற்குத் தாங்கள் வரப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
சி.வி. சண்முகம் பேசுகையில், “அதிமுக தலைமை அலுவலகம் எங்களின் கோவில் போன்றது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அந்த இயக்கத்தின் மீது ஒரு தூசி படுவதைக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களால் கட்சி அலுவலகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எங்களை அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அழகு பார்த்த இந்த இயக்கத்தின் கௌரவத்தைச் சிதைக்க மாட்டோம். இப்போது நிலவும் சூழலில் நாங்கள் அங்கு வரமாட்டோம்” எனக் கூறினார்.
மேலும், “சட்ட ரீதியாக நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபித்த பிறகே எங்களது கால் அங்கு பதியும். எனவே, காவல்துறை பாதுகாப்போ அல்லது வேறு அச்சமோ தேவையில்லை” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். தவெக அரசுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் மோதல் முற்றியுள்ள நிலையில், சி.வி. சண்முகத்தின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
#CVShanmugam #ADMK #Royapettah #PartyOffice #MGRMaaligai #BreakingNews #May14 #TamilNaduPolitics #AiadmkCrisis #EPSvsCVS #ThalapathyVijay #TVK_Support #PoliticalLoyalty #LegalBattle #StalinVsVijay #EdappadiPalaniswami #Velumani #FortStGeorge #TamilNews #VijayMakkalIyakkam_“`