சென்னை:
“தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சீரமைப்பு குறித்து அவர் விரிவாக உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அவர், “வெற்றி கிடைத்தால் அதன் பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்பதே நியாயம். யாரும் ஒருவர் மீது ஒருவர் பழி போட வேண்டாம். நடந்து முடிந்தது ஒரு புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. திமுகவின் வாக்கு வங்கி வலுவாகவே உள்ளது; நமக்கும் ஆளுங்கட்சிக்குமான வித்தியாசம் வெறும் 3.52 சதவீதம்தான். சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில், நமது பிரச்சார யுக்திகளை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். டீக்கடை அரசியலைத் தாண்டி சோஷியல் மீடியாவில் கொள்கைகளை வீரியமாகப் பேச வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மேலும், கட்சி நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டி அரசியலைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒற்றுமை இல்லாத இடங்களில் தான் கட்சி வீக்காக இருக்கிறது. இனி யாரும் செயல்பட முடியாது என நினைத்தால் மனப்பூர்வமாக விலகிக்கொள்ளலாம், உழைக்கத் தகுதியானவர்கள் காத்திருக்கிறார்கள். அடிமட்டத் தொண்டர்களின் குரலுக்குச் செவிசாய்க்கத் தொகுதி வாரியாகக் கள ஆய்வு நடத்தத் தலைமைக் கழகம் சார்பில் குழு அமைக்கப்படும். உடன்பிறப்புகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நாளை தனி இணையதளம் (Website) தொடங்கப்படும்” என அதிரடியாக அறிவித்தார். “சூரியன் ஒருபோதும் மறையாது, மீண்டும் உதித்தே தீரும்” என்ற நம்பிக்கையுடன் கட்சிப் பணிகளைத் தொடர அவர் வேண்டுகோள் விடுத்தார்.
#MKStalin #DMK #DistrictSecretariesMeeting #ElectionAnalysis #AnnaArivalayam #BreakingNews #May14 #TamilNaduPolitics #DravidianModel #SocialMediaPolitics #PoliticalStrategy #StalinSpeech #UnityIsStrength #NewStrategy #TNElection2026 #VictoryAhead #PartyReforms #TamilNews #SunWillRiseAgain #DMK_Update_