ழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 மாதங்களாக திறக்கப்படாமலிருந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்(13) நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி குறித்த வைத்தியாசாலை உணவகத்திற்கு விஜயம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்.
அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் உரியவர்களுடன் உரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலை உணவகம் நீண்ட காலமாக திறக்கப்படாமல் மூடப்பட்டு காணப்பட்டது.
குறித்த விடயம் வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அதனை விரைவாக திறந்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறிப்பாக உணவக்த்திற்கான ஒப்பந்த பணம் தெரிவிக்கபட்டிருந்த நிலையில் அதனை நாங்கள் குறைத்து வழங்குமாறு கேட்டிருந்தோம்.
இதனடிப்படையில் நேற்று இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இது சிறப்பாக இயங்குவதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.