சென்னை:
“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சியின் ‘அழுக்கு அரசியலை’ மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், “தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் எங்களது தோழமைக் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்தன. ஆனால், அந்த நம்பிக்கையை ஆளுங்கட்சி சிதைத்துவிட்டது. Clean Politics என்று பேசிவிட்டு, பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து, அவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர். இதுவா நீங்கள் சொன்ன தாய் சக்தி? அல்லது அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “ஆட்சி அமைக்கத் தடையாக இருக்க மாட்டோம் என நாங்கள் ஒதுங்கி நின்றால், அதனைப் பலவீனமாகக் கருத வேண்டாம். திமுக தொடர்ந்து தனது கொள்கையில் உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். விலை போன அதிமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் என்ன ‘ரிட்டன் கிப்ட்’ கொடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என அவர் சாடியுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று சட்டமன்றத்தில் தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்துள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.
#MKStalin #DMK #OppositionVoice #VijayAsCM #TVK_Government #BreakingNews #May14 #TamilNaduPolitics #DirtyPolitics #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyUpdates #StalinVsVijay #PoliticalWar #AiadmkSplit #HorseTrading #FortStGeorge #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`