புதுடெல்லி:
நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET-UG) நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், தேர்வின் நம்பகத்தன்மையைக் காக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்காக சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு புகாரால் தற்போது செல்லாததாகிவிட்டது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிஐ-க்கு (CBI) தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவோ அல்லது தனியாகக் கட்டணம் செலுத்தவோத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்கள் செலுத்திய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்த நிலையில், இந்தத் தேர்வு ரத்து அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
#NEETCancel #NEET2026 #NTA #CBIInvestigation #PaperLeak #MedicalEntrance #BreakingNews #May12 #EducationNews #StudentUpdate #ReExam #NEETScam #JusticeForStudents #TamilNaduEducation #ThalapathyVijay #NewGovernmentTN #VijayAsCM #TamilNews #VijayMakkalIyakkam #NationalTestingAgency_“`