மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்கள மயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்களமயமாக்கும் திட்டத்தை, இங்கு தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அம்பலப்படுத்தவில்லை? வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல, கிழக்கில் இரா. சாணக்கியன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி பணியவைத்து, இந்தச் சிங்களமயமாக்கலுக்குத் துணைபோகும் திட்டத்தை வகுத்துள்ளாரா? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை – ஊத்துச்சேனை மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10) கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்க கூடாது. என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை முழுமையாகச் சிங்களமயமாக்குவதற்கு மட்டக்களப்பு ஒரு தடையாக உள்ளது. ஏனெனில் அது கிழக்கின் இதயமாக இருக்கிறது. அதனை நேரடியாக மாற்றுவது கடினம் என்பதால், மட்டக்களப்பின் இரு எல்லைகளான அம்பாறை மற்றும் திருகோணமலையை முதலில் முழுமையாகச் சிங்களமயமாக்கி, மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திய பின்னர் அங்கு கைவைக்கலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம்.

“யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே கிழக்கின் எல்லைகளைச் சிங்களமயமாக்கும் வேலைத்திட்டம் ஓரளவு பூர்த்தியடைந்திருந்தது. இதனால்தான், தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து, எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஷ்டி தீர்வை வழங்க வேண்டும் அல்லது பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற 1977 ஆம் ஆண்டு ‘வட்டுக்கோட்டை தீர்மானத்தை’ எடுத்தோம்.

விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் இத்தகைய குடியேற்றங்களைப் பெரிய அளவில் செய்ய முடியவில்லை. ஆனால், 2009 இற்கு பிறகு போராட்டத்தின் சக்தியாக இருந்த மக்களை அழித்து இனப்படுகொலை செய்த பின்னர், இன்று மட்டக்களப்பில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர். இதுதான் கசப்பான உண்மை.”

“கிழக்கில் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையைக் கைப்பற்ற ராஜபக்ச தரப்பினர் ‘மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டத்தை’ ஆரம்பித்தனர். சோளச் செய்கை என்ற பெயரில் போலி உறுதிகளை வழங்கி, சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். இதன் விளைவாகவே பண்ணையாளர்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதே திட்டம்தான் தற்போது ஊத்துச்சேனை கிராமத்திலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த அநியாயத்தை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் முதன்முதலில் வெளிப்படுத்தவில்லை? யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் இங்கு வந்து நிலைமையை நேரில் பார்த்த பின்னரே, இது ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தது.”

“சிங்களமயமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு கட்டம் வரை கொண்டு செல்வதற்காகவே இந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காக்கின்றனரா? அவர்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே, யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செ. கஜேந்திரனோ அல்லது கஜேந்திரகுமாரோ இது குறித்துப் பேசும்போது, ‘தேவையில்லாத பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்’ என்று பொய்களைச் சொல்லிச் சிறுமைப்படுத்தி, உண்மையை மூடி மறைக்க முடியும் என நினைக்கிறார்கள் போலும்.

மக்களிடம் வாக்குக் கேட்கும் அவர்கள், உங்கள் பிரச்சினைகளை முன்னின்று தீர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள். ஆனால் அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? அவர்களும் இதற்குத் துணை போகிறார்களா? வடக்கில் சுமந்திரன் செய்வது போல, கிழக்கில் சாணக்கியன் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி, சிங்களமயமாக்கலுக்குத் துணை போகிறாரா? தமிழரசு கட்சி சார்பில் தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடமே நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.”

“பாதிக்கப்பட்ட எல்லைப் பிரதேசங்களில் உள்ள மக்களைத் தக்கவைத்தால் மட்டுமே இந்த மண்ணைப் பாதுகாக்க முடியும். நீங்கள் உங்கள் நிலங்களை விட்டு வெளியேறினால் நிலப்பரப்பு சுருங்கும். இதுதான் எதிரியின் விருப்பம். எல்லையில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தால் மட்டுமே அவர்கள் அங்கு நிலைத்து நிற்பார்கள்.

எமது அரசியல் தமிழ்த் தேசத்தைப் பாதுகாப்பதாக இருந்தால், முதலில் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் எங்குப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்களோ, அங்கு நேரில் சென்று அந்தப் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம் என தெரிவித்தார்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்