பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (11) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு (TID) அழைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவின் போது, மற்றுமொரு தாக்குதல் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த விசாரணைகளுக்காக அவர் இன்று காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.