செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 7ஆம் நாளான இன்று திங்கட்கிழமை (மே 04) அகழ்வு பணிகள் நடைபெற்றன.
அதன்போது 4 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்பு கூட்டு தொகுதிகளில் ஒரு குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உட்பட மொத்தம் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதுவரை செம்மணி மனித புதைகுழியில் 250 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 247 என்பு கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சில சான்று பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அவை நாளை செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கப்படும் என்றும், அதன் பின்னரே விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.