மே தினப் பேரணியின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு ‘ப்ரீ லோயர்ஸ்’ சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு தொடர்பாக, வருங்காலத்தில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதி பாரபட்சமான கருத்தை வெளியிட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
“அநுர குமார திஸாநாயக்க, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் தீர்ப்பு குறித்து வெளியிட்ட கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”.
இந்தக் கூற்று நீதிமன்ற செயல்முறை குறித்த சாதாரணமான ஒரு கருத்து அல்ல என்றும், திகதிகளைக் குறிப்பிட்டு முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து என்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.