கடந்த 2020 ஜூன் 18 அன்று, 37 வயதான கருலினா சியசுல்லோ மற்றும் அவரது மகள்களான கிளாாரா (6), லிலியானா (4), மிலா (1) ஆகியோர் பயணித்த வாகனம் மீது பிராடி ராபர்ட்சன் (Brady Robertson) ஓட்டி வந்த வாகனம் மோதியது. இதில் தாய் மற்றும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
1. மேன்முறையீட்டின் பின்னணி:
2022 ஆம் ஆண்டு பிராடி ராபர்ட்சன் தனக்கு விதிக்கப்பட்ட 17 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் போதையில் வாகனம் ஓட்டியமைக்கான (Impaired driving) குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்தார். இரத்தத்தில் உள்ள THC (கஞ்சா போதைப்பொருள்) அளவு தொடர்பான சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
2. நீதியரசரின் தீர்ப்பு:
இந்த வாரத் தொடக்கத்தில் தீர்ப்பை வெளியிட்ட தலைமை நீதியரசர் மைக்கேல் துல்லோக் (Chief Justice Michael Tulloch), பின்வரும் காரணங்களைக் கூறி மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தார்:
சட்டம் சரியானது: இரத்தத்தில் 5 ng/mL THC அளவு இருக்க வேண்டும் என்ற தற்போதைய சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டதே.
கொடூரமான பின்னணி: விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, ராபர்ட்சன் போதையில் வாகனம் ஓட்டி ஒரு நடைபாதையில் மோதிவிட்டு, பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க அதிவேகமாகத் தப்பிச் சென்றார்.
விபத்தின் போது நிலை: விபத்து நடந்த நாளில், அவர் உரிமம் மற்றும் காப்புறுதி இல்லாத வாகனத்தில் சட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட 8 மடங்கு அதிகமான THC போதையுடன் வாகனம் ஓட்டியுள்ளார். அத்துடன் அவரது வாகனத்தில் ஃபெண்டானில் (Fentanyl) போன்ற போதை மாத்திரைகளும் இருந்துள்ளன.
3. தண்டனை குறைப்பு மறுப்பு:
ராபர்ட்சனின் தரப்பு, 10 ஆண்டு தண்டனை வழங்கப்பட்ட ‘மார்கோ முஸோ’ (Marco Muzzo) வழக்கை ஒப்பிட்டுத் தண்டனை அதிகம் என வாதிட்டது. ஆனால், ராபர்ட்சனின் தொடர்ச்சியான சட்டமீறல்கள் மற்றும் நான்கு உயிர்களைப் பறித்த கொடூரத்தைக் கருத்தில் கொண்டு 17 ஆண்டு தண்டனை சரியானது என நீதியரசர் உறுதிப்படுத்தினார்.
ஒரு குடும்பத்தின் பேரழிவு:
இந்த விபத்தால் மைக்கேல் சியசுல்லோ என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் இழந்து, தனது முழு குடும்பத்தையும் பறிகொடுத்துள்ளார். ராபர்ட்சனின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயல் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது என நீதிமன்றம் வேதனை தெரிவித்தது