தேநீர்ப் பைகளில் புற்றுநோய்க் காரணிகள்?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் பைகள் (Tea bags), ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான நுண்நெகிழித் துகள்களை வெளியேற்றுவதாகவும், இது மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நானோபிளாஸ்டிக் எனப்படும் இந்த மிகச்சிறிய துகள்கள், தேநீரை அருந்தும்போது மனித உடலின் திசுக்களில் தங்கிவிடுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த நுண்நெகிழித் துகள்களின் நீண்டகால பாதிப்புகள் குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் தேவைப்பட்டாலும், ஆரம்பகட்ட ஆதாரங்கள் இவை புற்றுநோய் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கின்றன.

ஈரான் மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட 19 ஆய்வுகளின் பகுப்பாய்வு முடிவுகளின்படி, ஒரு சாதாரண காய்ந்த தேநீர் பையில் சுமார் 130 கோடி பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேநீர் தயாரிப்பதற்காக இந்தப் பைகளைச் சுடுநீரில் இடும்போது, வெப்பத்தினால் அந்தப் பிளாஸ்டிக் துகள்கள் மேலும் சிதைந்து அவற்றின் எண்ணிக்கை சுமார் 1,470 கோடி வரை அதிகரிக்கிறது.

நைலான் மற்றும் பி.இ.டி (PET) கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் பைகளை அதிக வெப்பம் கொண்ட நீரில் ஊறவைக்கும்போது, மிக அதிகமான அளவில் பிளாஸ்டிக் துகள்கள் வெளியேறுவது சோதனையில் உறுதியாகியுள்ளது.

இந்தத் துகள்கள் தேநீர் பையின் மூலப்பொருட்களிலிருந்தோ, உற்பத்தியின் போது ஏற்படும் மாசுபாடுகளிலிருந்தோ அல்லது வேதிவினைகளாலோ உருவாகலாம் என கருதப்பட்டாலும், இதன் துல்லியமான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தேநீர் பைகள் மட்டுமன்றி, போத்தல்களில் அடைக்கப்பட்ட தேநீர் (Bottled tea) மற்றும் பபுள் டீ (Bubble tea) போன்ற பானங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள் மற்றும் உறிஞ்சுகுழாய்கள் மூலமாக நுண்நெகிழித் துகள்கள் கலக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகை பெவர்லி காலர்டு (Beverley Callard – 69) தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

தனக்குப் புற்றுநோய் இருப்பது தெரியாமலேயே ‘I’m A Celebrity’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், அங்கு மயங்கி விழுந்த பின்னரே தனது உடல்நிலை குறித்துத் தெரியவந்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில், அன்றாட உணவுக் பழக்கவழக்கங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

தேநீர் பைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க நிபுணர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்:

இலைத் தேநீர்: தேநீர் பைகளுக்குப் பதிலாகத் தேயிலைகளை நேரடியாகப் (Loose-leaf tea) பயன்படுத்துவது சிறந்தது.

காகிதப் பைகள்: நைலான் அல்லது பிளாஸ்டிக் வலை போன்ற பைகளைத் தவிர்த்து, காகிதத்தால் ஆன தேநீர் பைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

அலசுதல்: தேநீர் பைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருமுறை அலசுவது துகள்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும்.

மைக்ரோவேவ் தவிர்த்தல்: மைக்ரோவேவ் அடுப்பில் தேநீர் தயாரிப்பதைத் தவிர்ப்பதும், வடிகட்டப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவதும் மாசுபாட்டைக் குறைக்க உதவும்.

தற்போது உணவு மற்றும் குடிநீரில் நுண்நெகிழித் துகள்கள் பரவியுள்ள சூழலில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

719852590_10242235868731525_4126836530523673060_n

சொல்லிசை பாடகரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

June 10, 2026

சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன்னை உடனடியாக விடுதலை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் இன்று

5XLYI5BEFJCEVNM63BGIUWFOPU

பி.சி (B.C.) பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் பலி, 3 பேர் காயம்

June 10, 2026

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle

canada bank gover

பொருளாதார மந்தநிலை (Recession) என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்’: கனடா வங்கி ஆளுநர்

June 10, 2026

கனடா வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மேக்லம் (Tiff Macklem), இதுவரை தாம் பார்த்த தரவுகளின்படி, நாட்டின்

4CLOLKCC2FG3RAQOW6ITDCPJGY

வடக்கு ஒன்டாரியோவில் கொல்லப்பட்ட பிராம்ப்டன் OPP அதிகாரி தருண் பாலி: நாம் அறிந்தவை

June 10, 2026

செவ்வாய்க்கிழமை மதியம் வடக்கு ஒன்டாரியோவில் பணியின் போது கொல்லப்பட்ட ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி தருண் பாலி, பிராம்ப்டனைச்

court-judge-hammer-gavel-696x398

அரசு வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த விவகாரம்: விமல் வீரவன்சவின் சகோதரருக்கு வெளிநாட்டு பயணத்தடை

June 10, 2026

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத்

Screenshot_20260610_143451_Instagram

போலி கனடா கடவுச்சீட்டு மூலம் லண்டன் செல்ல முயற்சி: தாய்லாந்து விமான நிலையத்தில் இலங்கை நாட்டவர் கைது

June 10, 2026

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், போலி கனடா நாட்டு கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி

721089767_10242010452096412_6680718909023026465_n

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு இன்று(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது

June 10, 2026

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி

dailythanthi_2026-06-10_7scngxem_Untitled-11

“10, 12-ம் வகுப்பில் மாஸ் காட்டிய மாணவர்களுக்கு ரூ.72 லட்சம் ஊக்கத்தொகை!” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

June 10, 2026

சென்னை ‘சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம்

kizhakkunews_2025-10-29_bqqnv4dz_CTR-NirmalKumar (1)

“மின்தடையை ஏற்படுத்தி தவெக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இமாலய சதி!” – 125 அதிரடி ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்து அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு!

June 10, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் எவ்வித மின்சாரத் தட்டுப்பாடும் துளியும் இல்லை; ஆனால், ஆங்காங்கே வேண்டுமென்றே செயற்கையான மின்தடையை ஏற்படுத்திப்

che

21ஆம் நாள்; செம்மணி மனிதப் புதைகுழியில் 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம்

June 10, 2026

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 7

image_a55b9f0e51

முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா ஜூன் 12 வரை விளக்கமறியலில்

June 10, 2026

கொழும்பு: தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜயலால் டி சில்வா, கொழும்பு பிரதம நீதவான்

doctor11

பெர்த்தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இலங்கை மருத்துவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 10, 2026

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அக்குபஞ்சர் (Acupuncture) சிகிச்சையின் போது பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை