சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின் போது வாகனத்தில் செல்லாமல், மக்களுடன் மக்களாக நடந்து சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செல்லும் வழியில் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சிய முதல்வர், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இந்த எழுச்சிமிக்க பிரசாரம் குறித்து முதல்வர் தனது எக்ஸ் (X) தளத்தில், “சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! சோழிங்கநல்லூர் – வேளச்சேரி – சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும்… ‘தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்..’ வெல்வோம் ஒன்றாக!” என்று பதிவிட்டு வெற்றியை உறுதி செய்துள்ளார்.
#MKStalin #DMK #Chennai #TamilNaduElection2026 #StalinCampaign #DMKFortress #UdayanidhiStalin #VoteForRisingSun #TNElections #ChennaiPolitics #StalinStyle #PoliticalWave #TamilNaduPolitics #Election2026 #StalinSelfie #DevelopmentPolitics #WinningVibe #SocialJustice #RisingSun #ViralPost