ஈஸ்டர் தாக்குதல் 7-ஆம் ஆண்டு நினைவு: நீதிக்கான அழுத்தங்களைத் திருச்சபை தொடரும் என அருட்தந்தை ரோஹன் சில்வா தெரிவிப்பு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உண்மையை வெளிப்படுத்தவும் நீதியை நிலைநாட்டவும் கத்தோலிக்கத் திருச்சபை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சமூக மற்றும் சமய நிலையத்தின் (CSR) தலைவர் அருட்தந்தை ரோஹன் சில்வா வழங்கிய நேர்காணலில், தற்போதைய விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து விளக்கமளித்தார். முக்கிய கோரிக்கைகள் மற்றும் தாமதங்கள் சுதந்திரமான விசேட அரச வழக்கறிஞர் (Independent Special Prosecutor) ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை […]

சட்டசபைக்குள் செல்கிறாரா விஜயகாந்த் வாரிசு? விருதுநகரில் விஜய பிரபாகரனுக்கு அமோக ஆதரவு: தந்தி டிவி சர்வே!

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விருதுநகர் தொகுதியில் களம் காணும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகர் தொகுதியில் இம்முறை தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், அதிமுக சார்பில் வி.ஜி.கணேசன், தவெக சார்பில் செல்வம் மற்றும் நாதக சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தந்தி டிவியின் கணிப்பின்படி, […]

வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ மற்றும் ‘நிதி செயற்பாட்டு அறிக்கை 2025’ ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நேற்று(20/04/2026) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய வங்கியின் ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க குறித்த அறிக்கைகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஜனாதிபதியிடம் வழங்கினார். 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை: […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு: யாழில் சுடரேற்றி அஞ்சலி

2019-ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை) 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உயிரிழந்தவர்களுக்காக விசேட மத வழிபாடுகளும் அஞ்சலி நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. யாழ். மறைமாவட்டத்தில் உயிரிழந்த ஆன்மாக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட அஞ்சலி நிகழ்வுகள் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றன. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையில் அஞ்சலி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாண ஆயர் இல்ல சிற்றாலய […]

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் தீபச்செல்வன் முறைப்பாடு

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்களம் கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் தடுத்து வைத்துள்ளது. இது தொடர்பில் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் […]

“என் ரத்தமே எனக்கு விஷமானால்.. தொண்டர்களே என் மருந்து!” – மகனுக்கு எதிராக ராமதாஸ் எழுதிய உருக்கமான கடிதம்!

தைலாபுரம், 2026 சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “அன்புமணியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண வேதனை எனக்கு மட்டுமே தெரியும். எப்போது அன்புமணி […]

தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், சீரமைப்புச் செய்க; முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையத்தின்கீழான பெரியஇத்திமடு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச்செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த விடயப் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார். வரவுபிலவு குளத்தின்கீழ் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளின் அழைப்பையேற்று 20.04.2026நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் […]

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை செயலாளர் லோரி சாவேஸ் டெரிமர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை செயலராக இருந்த லோரி சாவேஸ்-டெரிமர் பதவியிலிருந்து விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின்னர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறும் மூன்றாவது பெண் அதிகாரி இவராவார். அவர் தனியார் துறையில் ஒரு பொறுப்பை ஏற்கப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்காலிகச் செயலராக கீத் சாண்டர்லிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அவர் தனது அலுவலகத்தில் மது அருந்தியதாகவும், ஒரு கீழ்நிலை அதிகாரியுடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாகவும் எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் […]

‘சமாதான நடைபயணம்’; ஜனாதிபதி முழு ஆதரவு

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணம்’ (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணத்திற்கு’ ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் […]

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் அமுல்!

அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து நெடுநாள் மீன்பிடிக் கலன்களும், மாலைத்தீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கடக்கும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த விடுத்துள்ள விசேட அறிவிப்பில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார். “மாலைத்தீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் […]