அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை செயலராக இருந்த லோரி சாவேஸ்-டெரிமர் பதவியிலிருந்து விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்குப் பின்னர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறும் மூன்றாவது பெண் அதிகாரி இவராவார்.
அவர் தனியார் துறையில் ஒரு பொறுப்பை ஏற்கப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்காலிகச் செயலராக கீத் சாண்டர்லிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, அவர் தனது அலுவலகத்தில் மது அருந்தியதாகவும், ஒரு கீழ்நிலை அதிகாரியுடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாகவும் எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை வளையத்தில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாவேஸ்-டெரிமரின் பதவிக்காலம் ஆரம்பம் முதலே சில கொள்கை ரீதியான முரண்பாடுகளைக் கொண்டிருந்தது.
அவர் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவான சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இது ட்ரம்ப் நிர்வாகத்தின் பொதுவான ‘கட்டுப்பாடுகள் குறைப்பு’ கொள்கைக்கு மாறானது.