சென்னை,
தமிழக அரசியலில் நடிகர் விஜய் எடுத்துள்ள புதிய பாய்ச்சல் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் விஜய்க்கு ஆதரவாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தை சத்யராஜ் விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்தாலும், மகன் சிபி சத்யராஜ் தனது ஆதரவை மிக உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சிபி சத்யராஜ் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “1993-ல் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, அந்த எளிமையான இளைஞன் கோடிக்கணக்கான இதயங்களை வெல்வார் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் இனி நடிக்கப்போவதில்லை என்பதை ஏற்க கடினமாக இருந்தாலும், ஒரு நண்பராக, சகோதரராக உங்கள் புதிய பாதையை நான் மதிக்கிறேன். என் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. எனது திருமணத்திற்குப் பின் உங்கள் வீட்டில் அளித்த டின்னர், எனது ‘Lee’ பட விழாவிற்கு நீங்கள் வந்தது என பல நினைவுகள் இப்போதும் பசுமையாக உள்ளன.
பல சுய முன்னேற்ற புத்தகங்களை விட உங்களின் ‘குட்டி ஸ்டோரிகள்’ எனக்கு வாழ்க்கையை போதித்தன. ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்’ என்பது உங்களுக்கு வெறும் சினிமா வசனம் அல்ல, அது உங்கள் வாழ்க்கை தத்துவம். வென்று வா தலைவா, எப்போதும் உங்களோடு நான் இருப்பேன்!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தந்தையின் விமர்சனங்களுக்கு மத்தியில் மகனின் இந்த ஆதரவு விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
#Vijay #TVK #SibiSathyaraj #ThalapathyVijay #TVKVijay #Sathyaraj #TamilPolitics #TNElection2026 #VijayFans #SibiSathyarajLetter #CinemaToPolitics #TamilNaduElections #TVKWave #VijayPoliticalEntry #Brotherhood #TamilActor #TrendingNews #ViralPost #KollywoodPolitics #VoteForChange