சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
முக்கிய விதிகள் வருமாறு:
1. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
2. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ கூடாது.
3. சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், எக்ஸ் (X), முகநூல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலமாக எந்தவித தேர்தல் பிரசாரமும் செய்யக்கூடாது.
4. கல்யாண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும்.
5. வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த விதிகளை மீறுவோருக்கு 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவின் கீழ், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (ஏப்ரல் 21) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
#TNElection2026 #ElectionCommission #TamilNaduPolitics #ArchanaPatnaik #ElectionRules #ModelCodeOfConduct #Vote2026 #TamilNaduPolls #NoCampaigning #ElectoralLaw #TNElections #PublicNotice #VotingDay #ChennaiPolitics #ADMK #DMK #NTK #TVK #ElectionAlert #Democracy