இந்தியக் கடற்படைக் கப்பலான (INS) ‘நிரீக்ஷக்’ (Nireekshak), ‘செயற்பாட்டுத் திருப்புமுனை’ (OTR) மற்றும் பயிற்சி விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (21) இலங்கை வந்தடைந்தது.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமையச் சிறப்பான முறையில் வரவேற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Commander Sailesh Kumar Tyagi) தலைமையிலான இந்த சுழியோடி ஆதரவுக் கப்பல் (Diving Support Vessel), இலங்கை கடற்படையின் சுழியோடிகளுடன் (Diving Personnel) இணைந்து விசேட பயிற்சித் திட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அத்துடன், இக்கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன், நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.