இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யாத நிறுவனத்திற்கு கேள்வி கோரல்?

இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றுக்கே அரசாங்கம் நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விக்கோரலை வழங்கி இருக்கிறது. அதேநேரம் நிலக்கரி தரம் குறித்து பரிசோதிப்பதற்கு அங்கீகாரம் இல்லாத நிறுவனமே இதுவரை காலமும் நிலக்கரி தரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம்,விளையாட்டில் ஊக்கப்பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

லக்விஜய மின்சாரசபைக்காக இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் நிலக்கரி விலைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தொடர்பில் 2026 ஏப்ரல் 2ஆம் திகதி தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சுயாதீன நிலைப்பாடு ஒன்றை நாட்டு மக்கள் இதுவரை எதிர்பார்த்திருந்தனர்.

இந்த அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி அமைச்சரின் தலைமையில் அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சராக அரச தலைவராக இருக்கும் நிலையில் இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக இந்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி மாேசடி இடம்பெற்றிருப்பதை சாப்பிட்டு பார்த்தா தெரிந்துகொள்வது என ஜனாதிபதி இந்த சபையில் கேட்டிருந்தார். ஆனால் ஆவணங்களை பரீட்சித்து பார்ப்பதன் மூலம் இங்கு மோசடி இடம்பெற்றுள்ளதை கணக்காய்வாளர் நாயகத்துக்கு கண்டுபிடிக்க முடியுமாகி இருக்கிறது.

மேலும் நிலக்கரி கொள்வனவுக்காக கேள்விக்கோரலை வழங்கி இருக்கும் நிறுவனம் 2025,ஆகஸ்ட் 18 ஆம் திகதியில் பதிவு செய்திருக்கவில்லை. இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றுக்கே இந்த கேள்விக்கோரலை வழங்கி இருக்கிறது. இது தொடர்பில் அரசாங்கம் வெட்கப்படவேண்டும்.

ஜனாதிபதி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கிய பணத்துக்கும் அதிகமான நட்டம் இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிலக்கரியின் தரம் குறித்து ஆய்வு அறிக்கைகளில் முரண்பாடுகள் இருந்தாலும், அம்பய மாதிரிகளை பரிசோதிப்பதன் மூலம் இந்த முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள முடியுமாகி இருந்தபோதும், இன்றுவரை அம்பய மாதிரி பரிசோதிக்கப்படாமல் இருப்பது தவறு, அது மோசடி என கணக்காளர் நாயகம் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் இந்த நிலக்கரி தரம் குறித்து பரிசோதிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் நிறுவனத்துக்கு அதுதொடர்பில் அங்கீகாரம் இல்லை. அங்கீகாரம் இல்லாத நிறுவனமே இதுவரை காலமும் இந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

அத்துடன் தற்போது 3 இலட்சம் மெட்ரிக்தொன் நிலக்கரி அவசர கொள்வனவுக்காக அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் அது தொடர்பில் அடிப்படை தகுதிகளை பூரணப்படுத்தியிருக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த நலக்கரி கொள்வனவு தொடர்பில் இதுவரை காலமுமும் அரசாங்கம் தெரிவித்துவந்த பொய் பிரசாரம் தொடர்பில் மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அமைச்சர் பதவி விலகவேண்டும் என்றார்.

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்