கனடா: கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேர்லின் கிளாடு லிபரல் கட்சியில் இணைந்தார்!

கனடாவின் சர்னியா-லம்ப்டன்-பிகேஜ்வானோங் (Sarnia—Lambton—Bkejwanong) தொகுதியின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான மேர்லின் கிளாடு (Marilyn Gladu), கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகி ஆளும் லிபரல் கட்சியில் இணைந்துள்ளார். இந்தத் துணிகரமான அரசியல் மாற்றம் (Floor Crossing), பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது. அரசியல் பின்னணி: 2015 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் மேர்லின் கிளாடு. இவர் ஒரு தொழில்முறை […]
கனடா: பேஷோர் மால் நகைக்கடை கொள்ளை; சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

கனடாவின் ஓட்டாவா நகரில் உள்ள பிரபல்யமான பேஷோர் ஷொப்பிங் சென்டரில் (Bayshore Shopping Centre) இடம்பெற்ற துணிகர நகைக்கடை கொள்ளை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காணப் பொதுமக்கள் உதவியை ஓட்டாவா பொலிஸார் நாடியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி காலை 9:40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கண்ணாடிக் கூண்டுகளை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி சந்தேக நபர் குறித்த […]
நெடுந்தீவு போக்குவரத்து நெருக்கடிகள்; இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள்

நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் திருமிகு சாய் முரளி அவர்களுக்கும் நெடுந்தீவுப் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், நெடுந்தீவுக்கான தற்போதைய போக்குவரத்துச் சேவைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்பது தொடர்பாகப் பல்வேறு விடயங்கள் […]
சூரியன் வெப்பத்தின் அளவு நாளை உயர்கின்றது!
நாளை (09) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இதனால் பல இடங்களில் அதிகவெப்பநிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை […]
இராணுவ ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் நாடுகளுக்கு 50% வரி – அமெரிக்க ஜனாதிபதி
ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாடும், எவ்வித விலக்குமளிக்கப்படாமல் உடனடியாக 50% இறக்குமதி வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு உடன்பட்ட பின்னர், சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த வரி விதிப்பு குறித்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
கனடாவில் பெற்றோல் விலை குறைகிறது!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, கனடாவின் ஓட்டாவா (Ottawa) நகரில் பெற்றோல் விலைகள் கணிசமாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல், ஒரு லீற்றர் பெற்றோல் விலை குறைந்தது 12 காசுகள் (12 cents) வரை குறைய வாய்ப்புள்ளதாக ‘மலிவு விலையிலான எரிசக்திக்கான கனடியர்கள்’ அமைப்பின் தலைவர் டான் மெக்டீக் (Dan McTeague) தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் […]
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவோம் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் தாங்கள் ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலக நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான தஸ்நிம் (Tasnim), அந்நாட்டின் உயர் மட்டத் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் முன்னெடுத்த ’10 அம்ச அமைதித் திட்டத்தின்’ ஒரு பகுதியாக இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், லெபனான் […]
மேலும் 15% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு ‘தேசிய கட்டமைப்பு தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நாளை மீண்டும் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடு முழுவதிலும் நாளை (9) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக, சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
40-வது நாளாக ஈரானில் இணைய சேவை முடக்கம்!

ஈரானில் இணையச் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடக்கம் தற்போது 40-வது நாளை எட்டியுள்ளதாக இணைய கண்காணிப்பு குழுவான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தத்தமது வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், போர் காலத்தைப் போன்ற இக்கடுமையான தணிக்கை நடவடிக்கை தொடர்கிறது. ஈரான் மக்கள் மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ளனர் என NetBlocks குறிப்பிட்டுள்ளது. இணையச் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்ட போதிலும், ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையம் மற்றும் இதர முறைகளைப் பயன்படுத்திச் […]