கியூபெக் மாகாணத்தின் ஹண்டிங்டன் (Huntingdon) பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கியூபெக் மாகாண பொலிஸார் (Sûreté du Québec) உறுதிப்படுத்தியுள்ளனர்.
மொன்டெரெஜி பிராந்தியத்தில் உள்ள ரிட்ஜ் வீதி (Ridge Road) மற்றும் புஷெட் வீதி (Bouchette Street) சந்திப்புக்கு அருகில் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த இளைஞர் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரம் இருந்த பெரிய பாறை ஒன்றின் மீது மோதியுள்ளார்.
விபத்து நடந்த இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விபத்துத் துறை நிபுணர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.