கனடாவின் பார்ரி நகரின் மத்திய பகுதியில் (Downtown) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பாரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5, 2026) அதிகாலை 3 மணி அளவில், டன்பொப் வீதி கிழக்கு (Dunlop Street East) பகுதியில் உள்ள இரவு விடுதி (Night Club) ஒன்றிற்கு வெளியே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு ஏற்பட்ட ஒரு தகராறே துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிப்பு: துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 30 வயதுடைய பாரி நகரைச் சேர்ந்த நபர், மேலதிக சிகிச்சைக்காக ரொறன்ரோவில் உள்ள அதிதீவிர சிகிச்சை நிலையத்திற்கு (Trauma Centre) கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அவரது நிலைமை சீராக (Stable) உள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரின் புகைப்படங்களை பொலிஸார் சேகரித்துள்ளனர். அவரை அடையாளம் காணவும் கைது செய்யவும் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.