கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையில் பணியாற்றிய பிரசாந்த் இந்திரலிங்கம் உடல்நலக் குறைபாடு காரணமாக காலமாகிவிட்டதை மிகுந்த துயரத்துடன் மேற்படி காவல்துறையின் சமூக வலைத்தளம் பதிவிட்டுள்ளது.
22வது பிரிவு B பிளாட்டூனில் பணியாற்றிய கான்ஸ்டபிள் பிரசாந்த் இந்திரலிங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பீல் பிராந்திய காவல்துறையில் இணைந்தவர். வெறும் 30 வயதிலேயே இளமையான கடினமாக உழைக்கும் அர்ப்பணிப்புள்ள அதிகாரியாக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் பிரசாந்த் இந்திரலிங்கத்தை இவ்வளவு விரைவாக இழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது எனவும் பீல் பிராந்திய காவல்துறை தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளது.