மலேசியாவில் அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவிப்பு

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், மலேசிய அரசு முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில், மலேசியாவில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கினால் கடும் நடவடிக்கை – கல்வி அமைச்சு எச்சரிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது. 2016 ஏப்ரல் 29ஆம் திகதியிட்ட 12/2016 இலக்கச் சுற்றறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகள், விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள சுற்றறிக்கையை செயற்படுத்தும்போது, வழக்கு எண் 461/2012 (FR) தொடர்பான உயர்நீதிமன்ற […]
வாய்க்காலில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் இருந்து இன்று (2) சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவற்றில் 4 மோட்டார் குண்டுகள், 2 மோட்டார் குண்டு சாதனங்கள் மற்றும் ரீ-56 ரக துப்பாக்கிக்கான 75 தோட்டாக்கள் அடங்கும். வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
அறநெறி ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் பிரதி அமைச்சர் சந்திப்பு

கொழும்பு மாவட்ட அறநெறி ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை அமைச்சின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (30) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது ஞாயிறு அறநெறி பாடசாலை தொடர்பாகவும் அறநெறி பொறுப்பாசிரியர்கள், பொறுப்பாசிரியைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுக்கான அங்கீகாரம், அடையாள அட்டைகள், மாணவர்கள் அறநெறி கல்வியினை தொடர்வதற்கான அடிப்படை வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சீருடை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஒரு […]
மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஐவர் படுகொலை: நால்வருக்கு தூக்கு

பொகவந்தலாவ, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில், மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நீண்டகாலமாக நடைபெற்று வந்த கொலை வழக்குகளில் நான்கு நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய வியாழக்கிழமை (02) தீர்ப்பை வழங்கினார். 1998-ஆம் ஆண்டில் நானுஓயா, பொலிஸ் பிரிவில் நிகழ்ந்த கொலைக்காக 47 வயதுடைய ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2019-ஆம் […]
கண்டி விபத்து: மற்றைய மாணவனும் உயிரிழப்பு

கண்டியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய மாணவனும் வியாழக்கிழமை (02) மாலை உயிரிழந்துள்ளதாக பல்லேகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியின் பிரதான பாடசாலைகளான புனித சில்வெஸ்டர் மற்றும் வித்தியார்த்த கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே, தனியார் பேருந்துடன் மோதி இவ்விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் உயிரிழந்திருந்தார். […]
உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிள்ளையான் விளக்கமறியலில்!

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (2) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் […]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் கொள்ளை : பெண் உட்பட அறுவருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்ட பின்னர் அவர்களைக் கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய சகோதரர் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய […]
வடக்கில் ஆசிரியர் இடமாற்றத்திற்கு இடைக்காலத் தடை

வடக்கு மாகாணத்தில் 193 ஆசிரியர்களை ஒரே நேரத்தில் “சேவையில் தேவை” என்ற அடிப்படையில் மாற்றல் செய்வது நிர்வாக கொள்கைகளுக்கும், ஸ்தாபன முறைமை அத்தியாயம் 3.2 மற்றும் 11 விதிகளுக்கும் முரணானது என சுட்டிக்காட்டி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தலைவர் — ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய — இந்த இடமாற்றத்தை உடனடியாக நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொது சேவை ஆணைக்குழு விதிகளின் பிரிவு 267-ன் கீழ் […]
ஈரான் போர்; கனடாவில் 25 சென்ட் வரி குறைப்பு கோரும் எதிர்க்கட்சி

ஈரான் போர் காரணமாக 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கன்சர்வேடிவ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. மத்திய அரசு விதிக்கும் பல்வேறு எரிபொருள் வரிகளை நீக்குவதன் மூலம் ஒரு லீட்டர் பெட்ரோலில் 25 சென்ட் வரை குறைக்க முடியும் என அக்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடியர்கள் அதிக வரி செலுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய்மையான எரிபொருள் […]