ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche), யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 27, 2026) அன்று இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார். இதன் போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.