சிறுமிகள் பாலர் பாடசாலை மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு; உடனடி விசாரணை வேண்டும்

தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள சிறுமிகள் பாலர் பாடசாலை மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு குறித்து “முடிந்தவரை விரைவில்” விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Türk) கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தாக்குதலில் 110 குழந்தைகள் உட்பட மொத்தம் 168 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கப் படைகள் தற்செயலாக அந்தப் பள்ளியைத் தாக்கியிருக்கலாம் என்று அந்நாட்டு இராணுவ விசாரணை அதிகாரிகள் நம்புவதாகவும், ஆனால் அவர்கள் இன்னும் […]
மானிப்பாய் வீதிகளில் உள்ள கழிவுகளை மக்களைக் கொண்டு அகற்ற முடியாது!

வீதிகளில் உள்ள கழிவுகளை மக்கள் அகற்ற முடியாது என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கூட்டம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தலைமையில் இன்று(27.03.2026) இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட, மரணச் சடங்கின்போது வீதியில் வெடி கொழுத்துதல் தொடர்பான தீர்மானம் குறித்து சபையில் பேசப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெடி கொழுத்துவது தொடர்பிலான தீர்மானம் இது குறித்து உறுப்பினர் பகீரதன் கருத்து தெரிவிக்கையில், கடந்த கூட்டத்தில் வெடி […]
போதைப் பொருள் கடத்திய 20 வயது இளைஞருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சிசிடிவி கேமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் நேற்று (26.03.2026) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் தனியார் பேருந்து வண்டியில் அனுப்பப்பட்ட சிசிடிவி கேமரா பொதியுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (26.03.2026) இடம்பெற்றது. கொழும்பிலிருந்து […]
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்கு எதிராக போராட்டம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் […]
வறட்சியான காலநிலை; தீயில் கருகியது வனம்

மத்திய மலைநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஹட்டன் – டிக்கோயா, தரவளை தோட்ட வனப்பகுதியில் வியாழக்கிழமை (26) பிற்பகல் 2.00 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருகின்றது. தீ ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் தோட்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக மத்திய மலைநாட்டின் பல நீர் ஆதாரங்கள் வற்றி வருகின்றன. […]
யாத்திரை சென்றவர் திடீர் மரணம்
சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர், வௌ்ளிக்கிழமை (27) காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மல்வத்தை – நல்லதண்ணி பாதையிலுள்ள கங்குலதென்ன பகுதியில் வைத்து திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாகச் செயற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸ் நிலைய […]
ஈரான் பாலர் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் தாயின் கருத்து

ஈரானில் மோதலின் தொடக்கத்தில் ஒரு சிறுமிகள் பாலர் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் தாய், “உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும்” என்று கூறுகிறார். மினாப் (Minab) குண்டுவெடிப்பு குறித்த ஐநா மனித உரிமைகள் பேரவை விவாதத்தின் போது பேசிய மொஹத்தேச ஃபல்லாஹத் (Mohaddeseh Fallahat), “இந்தத் துயரத்திற்கு காரணமானவர்கள்” என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டினார். மேலும் இரு நாடுகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அந்தப் […]
பாடசாலை மாணவர்களை குளவி கொட்டியதால் வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரவளைப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இன்று (27) காலை குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 10 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளையிலுள்ள குறித்த பாடசாலையில் 5-ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை பாடசாலை வளாகத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த குளவிக் கூடு கலைந்து அவர்களை கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாகப் பண்டாரவளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் எவருக்கும் பாரிய […]
முதன்முறையாக அமெரிக்க டொலரில் ட்ரம்பின் கையெழுத்து

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, புதிய நாணயத்தாள்களில் ஜனாதிபதியின் கையெழுத்தைச் சேர்க்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அமெரிக்கச் சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, விரைவில் வெளியிடப்படவுள்ள புதிய டொலர் தாள்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும் என அந்நாட்டுத் திறைசேரி அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ஜூன் மாதத்தில் புதிய 100 அமெரிக்க டொலர் தாள்கள் அச்சிடப்படவுள்ளன. இதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் […]
சுரேஷ் சாலே கைது; புலம்பெயர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலா அரசாங்கம் செயற்படுகின்றது? – சரத் வீரசேகர

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் தேவையை நிறைவேற்றுகின்றதா? என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது விவகாரம் தொடர்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிப்பதில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டது யாரின் தேவைக்காக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட […]