தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்கு எதிராக போராட்டம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாகத் தொடர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர் கௌரிதாஸ் பத்மலோஜினி கூறியதாவது:

“கட்சியின் யாப்பு விதிகளின்படி, தற்போதைய தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, தாமதமின்றி கட்சியின் 12-வது தேசிய மகாநாடு கூட்டப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.”

மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கட்சியின் புதிய நிர்வாகிகள் யாப்பு விதிகளின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளின் தெரிவும் கட்சியின் தலைமைக் குழு முன்னிலையிலேயே நடைபெற்றது. இருப்பினும், இந்தத் தெரிவு யாப்புக்கு முரணானது என தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதம் இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும், உட்கட்சி ஜனநாயகத்தை மீறும் இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, வழக்கை மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவற்றுள் சில:
• “தலைமைக் குழுவே! தேசிய மகாநாட்டை உடனே நடத்து!”
• “தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிக்காத்த கட்சியைச் சீரழிக்காதே!”
• “கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே, ரெலோவை அழிக்காதே!”
• “பதவி ஆசை போதும்; சாகும் வரை நீங்களா பதவியில் இருப்பீர்கள்?”
• “தலைமைக்குழு உறுப்பினர்களே! பதவி ஆசைக்காகவா அன்று ஆயுதம் தூக்கினீர்கள்?”

கட்சியின் புதிய நிர்வாகிகளின் தெரிவை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மகாநாட்டை நடத்தி புதிய தலைமையை உருவாக்க வழிவிடுமாறு போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்