மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche), யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை (மார்ச் 27, 2026) அன்று இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார். இதன் போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவன் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சைக்காக அவர் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லை எனக் கூறி அவரை அனுமதிக்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அங்கிருந்த தாதியர்கள் முதலுதவி அளிக்க முன்வரவில்லை எனவும், […]

“தேவைப்படும் வரை ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளும்” ஐ.நா வில் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஜெனிவா (சுவிட்சர்லாந்து): ஈரானுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “தேவைப்படும் வரை ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளும்” என்று கூறியுள்ளார். ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய சையத் அப்பாஸ் அராக்சி, […]

மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சரிடம் வலி வடக்கு இளைஞன் கேள்வி

வலி வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எனது கேள்விகளுக்கு பதில் கூற முடியாவிட்டால் உங்களிடம் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டி வரும் என வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ். அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை பார்த்து கேள்வி எழுப்பினார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருடங்களுக்கு மேலாக எமது பகுதியை […]

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு வினைத்திறனான சேவை; விசேட மாநாடு

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு அரச நிர்வாகத்தின் மூலம் மிகவும் வினைத்திறனான மற்றும் துரிதமான சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட பிரதேச செயலாளர்கள் மாநாடு வியாழக்கிழமை (26) துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8:30 மணியளவில் இம்மாநாடு ஆரம்பமானது. மாநாட்டிற்கு முன்னதாக, துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர், செயலகத்தின் அலுவலகச் செயற்பாடுகள் மற்றும் […]

மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா?

லகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada) என அழைக்கப்படும் புதிய கொவிட் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்படும் இந்த வைரஸ் வகையை உலக சுகாதார நிறுவனம் (WHO) “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” (Variant Under Monitoring) என வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வைரஸ் தற்போது உலகளவில் 23க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. டென்மார்க், ஜெர்மனி மற்றும் […]

இந்தியாவில் பொதுமுடக்கம்?

இந்தியாவில் பொதுமுடக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஈரான் போர் காரணமாக எரிபொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து, கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டது போன்ற ஒரு பொதுமுடக்கம் மீண்டும் ஏற்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படும் நிலையில், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் […]

புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி

புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21-ஆம் தேதி மதுரையிலும், 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நேர்காணல் கூட்டம் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, […]

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி முறிவா?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை பொது தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கும் , திமுக கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு விடயத்தில் உடன்பாடு தாமதமாக எட்டப்பட்டதால்.. பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் நேரடியாக மோதுகிறன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதியன்று ஒரே கட்டமாக முப்பது சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ்- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பிலும், பாஜக […]

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்

குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் தற்போது அவசரகால நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.