கூட்டுப் பாலியல் வன்கொடுமை; “நான் அமைதியாக செல்ல விரும்புகிறேன்” கருணைக்கொலையை விரும்பியேற்று உயிர்துறந்த இளம்பெண்!

தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் பகுதி முழுவதுமாக செயலிழந்துபோயுள்ளது. அதனையடுத்து, […]
பாரிய மனித உரிமை மீறல்கள்: மட்டக்களப்பில் வலுக்கும் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய வேண்டும் எனக் கோரியும், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்றைய தினமும் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் […]
கடுமையான வெப்பத்தால் மலையக நீர்த்தேக்கங்களும் வற்றிக்கொண்டு வருகின்றன!

மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் மற்றும் சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தொடர்ந்து இந்தப்பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் சகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் மேலும் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீருக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் விவசாய […]
கதிர்காமம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தில் தீ விபத்து

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று (27) தீப்பற்றியுள்ளது. பிற்பகல் 01.55 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இதில் பேருந்து முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கெஹெலிய மீதான குற்றம் நிரூபணம்: அரசுக்கு நஷ்ட ஈடாக 75 மில்லியன் செலுத்த வேண்டுமெனத் தீர்ப்பு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் பாரிய அபராதங்களை விதித்துள்ளது. நீதியரசர் பீ. பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று வெள்ளிக்கிழமை (27) இந்தத் தீர்ப்பை வழங்கியது. நீதிமன்ற உத்தரவின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்களது தனிப்பட்ட அரசாங்கத்திற்குப் அபராதம் தொகைகளைச் […]
அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆய்வு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 09:00 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் வரவேற்புரையாற்றுகையில், […]
சட்டவிரோதமாக எரிபொருளைப் பதுக்கிய மூவர் கைது
நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) நீர்கொழும்பு, புதுக்குடியிருப்பு மற்றும் ஹிங்குராக்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, மீன்பிடி படகு ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 1050 லீற்றர் டீசலை வைத்திருந்த 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் நேற்று மாலை புதுக்குடியிருப்பு பொலிஸார் சுதந்திரபுரம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அனுமதிப்பத்திரமின்றி […]
ஐ.நா பிரதிநிதியிடம் தமிழ் தேசியத் தலைவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்: யாழ்ப்பாணத்தில் விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்சே (Marc-André Franche) அவர்களுக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தசாப்த காலங்களாக தமிழ் இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) இன்னும் நீக்கப்படாமை குறித்து தலைவர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். சர்வதேச அழுத்தங்கள் […]
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு தாவரங்களை கடத்திய நபர் கைது

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் இன்று (27) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தத் தாவரங்களுடன், சந்தேகநபர் வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியைச் சேர்ந்த 57 வயதுடைய இந்தச் சந்தேகநபர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் காகிதங்களால் சுற்றப்பட்ட நிலையில் இந்த அலங்காரத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. […]
பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (27) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் […]