பாரிய மனித உரிமை மீறல்கள்: மட்டக்களப்பில் வலுக்கும் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு தகுந்த தண்டணை வழங்குவதுடன், அத்தண்டனை இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறு அமைய வேண்டும் எனக் கோரியும், சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்றைய தினமும் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 04 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதவானால் பிறப்பிக்கப்பட்டதையடுத்து இன்று குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் என முதற்கட்ட விசாரணைகளில் அறிய வந்த நிலையில் குறித்த பெண்ணின் குடுபத்தார், உறவினர்கள், பிரதேச பொது மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நாற்பது வட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் காணாமல் போனமை தொடர்பில் களுவாஞ்சிகுடி,வெல்லாவெளி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்திருந்த வேளையிலும் பொலிஸாரால் இது தொடர்பில் முறையான துரித விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதையும் தெரிவித்ததுடன், குறித்த சம்பவத்திற்குப் பாரிய கண்டணத்தையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

மட்டக்களப்பு, காந்திப் பூங்காவில் ஆரம்பித்த குறித்த போராட்டம் பின்னர் மட்டக்களப்பு கச்சேரி வரை அமைதியான முறையில் பேரணியாக முன்னெடுக்கப்பட்டபோது பொலிஸாரினால் கச்சேரிக்கு செல்ல முடியாதவாறு பஸ்களை இடையில் நிறுத்தியும், கச்சேரி பிரதான வாயிலை மூடியும் தடுத்திருந்தனர். இந்த நிலையில் கச்சேரிக்கு முன்னால் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்து போராட்டக் காரர்களுடன் கலந்துரையாடி அதில் நால்வருடன் நேரடி கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதன்போது அரசே குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை வழங்கு, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், கிணற்றில் வீசிய கயவர்களுக்கு என்னதான் தண்டனை, மனித தன்மையற்ற கொலைகாரர்களைத் தூக்கில் இடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே, வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு,கொடூரர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளே ஆஜராகாதே போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள், நாற்பது வட்டை கிராம பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்திற்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

தூத்துக்குடி கப்பல் கட்டும் தள எதிர்ப்பு: செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ஸ்ரீநாத்!

September 13, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்