இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26) மன்னார் நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினால் கைது […]
தாக்குதல் இடைநிறுத்தத்தை மீண்டும் நீடிப்பதற்குத் தீர்மானம்

ஈரானிய எரிசக்தி கட்டமைப்பு மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை மீண்டும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த தாக்குதல் நடவடிக்கை மேலும் 10 இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தமது ட்ருத் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் வரை இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படாது!

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (26) அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி, இலங்கையின் இனிப்பு வகை உற்பத்தித் துறையில் […]
உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாக பாகிஸ்தான்

2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாகக் காணப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அங்குள்ள நுண்துகள்களின் செறிவு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த அளவை விட 13 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தரக் கண்காணிப்பு நிறுவனமான IQAir இந்த வாரம் வெளியிட்ட அதன் வருடாந்த அறிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்குக் குறைவாக சராசரி நுண்துகள் அளவைப் பேண முடிந்தவை வெறும் 13 நாடுகள் மற்றும் […]
ஊழல் குற்றச்சாட்டு; அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான அமைச்சர் குமார ஜயக்கொடி நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார். குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன், அவரது […]
முறையான விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் அறுவர் கைது!

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரபலான பகுதியில், முறையான விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் அறுவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் 21, 23, 34 மற்றும் 41 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி; கைது
அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற ஒரு விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டில், போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (26) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பான நடவடிக்கைகளை முடித்து தருவதாக கூறி, அந்த நபரிடமிருந்து ரூ.4,000 இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர், கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவில் முறைப்பாடு […]
இணையமோசடி மையமொன்றை முடக்கியது பிரித்தானிய அரசு

கம்போடியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு பெரிய இணையமோசடி மையம் (Scam Centre) மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி தளம் (Crypto Platform) ஆகியவற்றின் மீது பிரித்தானிய அரசாங்கம் கடும் தடைகளை விதித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் மனித கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி மையங்கள், வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றி, கம்போடியாவிற்கு வரவழைத்து, அவர்களைச் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைத்து […]
இலங்கை மத்திய வங்கி சுயாதீன தன்மையை இழந்துள்ளது – ரவி கருணாநாயக்க

இலங்கை மத்திய வங்கி சுயாதீன தன்மையை இழந்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று அவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொள்ளும் போது மத்திய வங்கி சுயாதீனமாக செயல்படுவது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வருமான வரி சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வருமான வரி சட்டம் ஏற்புடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […]
தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜப்பான் அரசு மிக முக்கிய நடவடிக்கை

மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் விலையுயர்வைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜப்பான் அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் இப்போதைக்கு முடிவது போலத் தெரியவில்லை. இந்த மோதல் 4வது வாரமாகத் தொடர்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை […]