மாணவர்கள் மத்தியில் சமய விழுமியங்களை பேண வேண்டும்; பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் இந்து அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பூரணை நாட்களில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புகள் காரணமாக மாணவர்களின் சமய விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில், அவ்வகுப்புகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க சபை அனுமதி வழங்கியுள்ளது. காரைதீவு பிரதேச சபையின் 04வது சபைக்காலத்திற்கான 09வது மாதாந்த சபைக் கூட்டம் நேற்று (26) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபை அலுவலக மண்டபத்தில் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் […]
பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நேர்மறையான பதிலளித்துள்ளது ஈரான் – டிரம்ப்

பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நேர்மறையான பதிலளிப்பாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக 10 எண்ணெய் கப்பல்களை ஈரான் செல்ல அனுமதித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அதிபர், இந்த நடவடிக்கையை ஈரான் தனக்கு அளித்த ஒரு “பெரிய பரிசு” என்று அறிமுகப்படுத்தினார். ஈரான் தனது நேர்மையையும் ஸ்திரத்தன்மையையும் வெளிப்படுத்துவதற்காக 8 பெரிய எண்ணெய் கப்பல்களை செல்ல அனுமதிப்பதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தாலும், 10 கப்பல்கள் மட்டுமே […]
ஒன்றாக மது அருந்திய தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் மகன் பலி?
புத்தளம் – மகாகும்புக்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொஹொன்கல்ம பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர் தனது தந்தையுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, தந்தை தனது மகனை கோடாரியால் தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 63 வயதுடைய தந்தை […]
கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப் போவதில்லை!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு முடியும் வரை கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப் போவதில்லை கோதுமை மா நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தாண்டு காலத்திற்குப் பிறகு கோதுமை மாவின் விலை அதிகரித்தால், மீண்டும் பேக்கரி பொருட்களின் விலை உயர்த்தப்படுமா என அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு கோதுமை மாவின் விலை 10 ரூபாய் வரை அதிகரித்தால், பேக்கரி பொருட்களின் விலையைத் தாம் உயர்த்தப் போவதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் […]
சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) முற்பகல் கூடியது. தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் […]
நாளை ஆரம்பமாகிறது ஐ.பி.எல்

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரானது, பெங்களூருவில் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தை நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் சனிக்கிழமை (28) இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்வதுடன் ஆரம்பிக்கின்றது. முதற் கட்டமான ஏப்ரல் 12ஆம் திகதி வரையிலான போட்டி அட்டவணையே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 19ஆவது ஆண்டாக நடைபெறும் ஐ.பி.எல்லானது இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் இரசிகர்களுக்கு திருவிழாவாகவே அமையப் போகின்றது. ஈரானியப் போருக்கு மத்தியில் நல்லதொரு கவனக்கலைப்பானாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் இருக்கப் போகின்றது. எவ்வாறெனினும் போர் நீடித்தால் மின்வெட்டுகள் மற்றும் […]
மத்திய கிழக்குப் போரைக் காரணம் காட்டி நாட்டின் பிரச்சினைகளிலிருந்து அரசாங்கம் தப்ப முடியாது – சஜித் பிரேமதாச

நமது நாட்டின் எரிசக்தித் துறையில் பெரும் நெருக்கடி உருவாகி, இது பேரழிவில் முடியும் நிலை உருவாகி வருவதால், எரிசக்தி நெருக்கடியை கையாள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மத்திய கிழக்கு போரை காரணமாக காட்டி நாட்டின் பிரச்சினைகளிலிருந்து அரசாங்கம் தப்பிப்பதற்கு முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பு வாலுக்கராம விகாரையில் இடம்பெற்ற அன்னதான புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சமயமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச […]
கொள்கலன் சர்ச்சை; ஒரு பகுதியில் எவ்வித சிக்கல்களும் கண்டறியப்படவில்லை!

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஒரு பகுதியை விசாரணை செய்வதற்குத் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அந்தப் பகுதியில் எவ்வித முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், முழுநாடும் ஒன்றாக “போதைப்பொருள் ஒழிப்பு தேசியவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுங்கப் திணைக்களம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு வகையான போதைப்பொருள் […]
தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை

திமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு எதிராக நேற்று வியாழக்கிழமை (26) உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில் […]
2028 லொஸ் ஏஞ்சல்ஸ்; ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை?

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு இணங்க, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை செய்யும் புதிய தகுதிக் கொள்கையை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இப்புதிய கொள்கையின்படி, எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவுகளில் பங்கேற்கும் தகுதியானது, உயிரியல் ரீதியான பெண்கள் (Biological females) என்ற அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப்படும். இதனை உறுதிப்படுத்த, […]