சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஒரு பகுதியை விசாரணை செய்வதற்குத் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அந்தப் பகுதியில் எவ்வித முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முழுநாடும் ஒன்றாக “போதைப்பொருள் ஒழிப்பு தேசியவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுங்கப் திணைக்களம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு வகையான போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பான 147 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு, 5.8 பில்லியன் ரூபா பெறுமதியான 435 கிலோ கிராம் போதைப்பொருள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தான் பணிப்பாளராகக் கடமையாற்றும் தடுப்புப் பிரிவிக்கு குறித்த கொள்கலன்களில் ஒரு தொகுதி விசாரணைகளுக்காகக் கிடைத்தது.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட கணாய்வு மற்றும் தணிக்கைகளின் போது, அந்த கொள்கலன்களை இறக்குமதி செய்த நிறுவனங்கள் தொடர்பில் எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், குறித்த 323 கொள்கலன்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கிடைத்த பின்னரே இது குறித்த இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும். தற்போது தான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தான் பரிசோதனை செய்த கொள்கலன்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றார்.