பெண்களை கடத்திக் கொலை செய்யும் குழுவிடமிருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு; ஒருவர் கைது

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே,மாத்திரைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் […]

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்!

கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகளை கறுப்புச் சந்தை விலையில் கூட வாங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சம்பா, கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையையும் தாண்டி விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து […]

போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு வார்த்தைக்கு வராவிட்டால் ஈரானை தாக்கி அழிப்போம் – ட்ரம்ப்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஒன்றை எட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பமானதில் இருந்து முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று (26) இடம்பெறுகின்றது. அதில் பங்கேற்ற போதே அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை, ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்கு வராவிட்டால், அமெரிக்கா அவர்களைத் தொடர்ந்து அழித்துக்கொண்டே இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். ட்ரம்ப்பின் இந்த […]

ஜப்பான் ஹொன்ஷூவில் நிலநடுக்கம்

ஜப்பானின் பாரிய தீவான ஹொன்ஷூவின் கடற்பகுதியில் நேற்று(26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இரவு 7.48 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் தற்போது […]