முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்தை முறியடிக்க அயராது உழைத்த சுரேஷ் சாலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒரு பாசாங்குத்தனமான மற்றும் தேசத்துரோகச் செயல்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், மேலும் ஆறு அல்லது ஏழு குழுக்களின் அறிக்கைகளிலும் சாலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.